குவீன்ஸ்டவுன் பேட்டை விளையாட்டு வளாகம் மீண்டும் திறப்படுகிறது
வாசிப்புநேரம் -
படம்: ActiveSG
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் முதல் அக்கம்பக்க விளையாட்டு வளாகம் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மே மாதம் குவீன்ஸ்டவுன் விளையாட்டு நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கின.
புதுப்பிக்கப்பட்ட நிலையத்தில் மரபுடைமை அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
உலகத் தரநிலைகளுக்கு ஏற்ப மெருகேற்றப்பட்ட ரக்பி விளையாட்டுத் திடல் உள்ளிட்ட புதிய வசதிகள் குடியிருப்பாளர்களின் பயன்பாட்டுக்குத் தயாராகவுள்ளன.
வரும் சனிக்கிழமை அதிகாரபூர்வத் திறப்புவிழா நடைபெறவுள்ளது.
குவீன்ஸ்டவுன் பேட்டையில் பலதரப்பட்டோருக்கு விளையாட்டு வாய்ப்புகளை வழங்கும் இடமாக இந்த நிலையம் மாறியிருக்கிறது.
புதிய உடற்பயிற்சிக் கூடம், உடற்பயிற்சி நடவடிக்கை அறை, கூரைவேய்ந்த இடம் போன்றவை குடியிருப்பாளர்களுக்காகப் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
நீச்சல் குளமும் மெருகேற்றப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து குடியிருப்பாளர்கள் வசதிகளைப் பயன்படுத்திப் பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செயற்கைப் புல்தரையில் ஓட்டத் தடங்களைக் கொண்ட முதல் ActiveSG வளாகமாகவும் இது திகழ்கிறது.

ஆதாரம் : Mediacorp Seithi