Skip to main content
TOTO செய்தியை வெளியிடத்தான் வேண்டுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

TOTO செய்தியை வெளியிடத்தான் வேண்டுமா?

வாசிப்புநேரம் -
அதிர்ஷ்ட குலுக்கு தொடர்பான தகவலை, செய்தி நிறுவனங்கள் பொறுப்புடன் வெளியிட்டால் சிக்கல் இல்லை என்கிறார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo).

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் (Gerald Giam) எழுப்பிய கேள்விக்குத் திருவாட்டி தியோ எழுத்துபூர்வமாகப் பதில் கொடுத்தார்.

அதிர்ஷ்ட குலுக்கு சார்ந்த செய்திகள் அதைப் பிரபலப்படுத்தலாம்; சூதாட்டப் பழக்கத்தை ஊக்குவிக்கலாம்.

அதைக் கட்டுப்படுத்தத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு நடவடிக்கை எடுக்குமா என்று திரு கியாம் கேட்டார்.

சூதாட்டம் தொடர்பான செய்திகளை மக்கள் விரும்புகிறார்களா என்பதைக் கருத்தில் கொண்டு செய்தி ஆசிரியர் முடிவெடுப்பார் என்றார் திருவாட்டி தியோ.

செய்தி நிறுவனங்களிடம் பொதுமக்களும் நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் TOTO அதிர்ஷ்ட குலுக்கு தொடர்பான தகவல்களை வெளியிட அனுமதிக்கிறது.

பரிசுத்தொகை, வெற்றிபெற்ற எண்கள் உள்ளிட்ட தகவல்கள் Singapore Pools இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்றன.

அந்த நடைமுறை அதிர்ஷ்ட குலுக்கின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.

சூதாட்டத்தால் ஏற்படும் சமூகச் சிக்கல்களைக் களைய ஆணையம் அது சார்ந்த விளம்பரங்களை நெறிப்படுத்துகிறது என்றார் அமைச்சர் தியோ.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்