Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் லாவோஸிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் லாவோஸிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. 

Keppel Electric நிறுவனத்துக்கும் லாவோஸின் Electricite du Laos (EDL)  நிறுவனத்துக்கும் இடையிலான ஈராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையடுத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் இறக்குமதி தொடங்கியது. 

Lao PDR-Thailand-Malaysia-Singapore Power Integration Project (LTMS-PIP) என்றழைக்கப்படும் திட்டத்தின் மூலம் 100 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க நீர்வள மின்சாரம் சிங்கப்பூருக்கு அனுப்பப்படும். 

அது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள கட்டமைப்பின் மூலம் தாய்லந்து, மலேசியா ஆகிய நாடுகளைத் தாண்டிச் சிங்கப்பூரைச் சேரும். 

இதுவே 4 ஆசியான் நாடுகளின் தொடர்பில் இடம்பெறும் முதல் மின்சார வர்த்தகத் திட்டம் ஆகும். 

திட்டத்தின் மூலம் சிங்கப்பூரின் 2020ஆம் ஆண்டு பதிவான அதிகபட்ச மின்சாரத் தேவைகளில் 1.5 விழுக்காடு பூர்த்தியாகும் என்று கூறப்பட்டது. அது 144,000 நான்கறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு ஓராண்டுக்குத் தேவையான மின்சாரத்துக்குச் சமம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்