Skip to main content
சுவா சூ காங் கிரசண்ட் புளோக்கில் தரை ஓடுகள் சிதறிய சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுவா சூ காங் கிரசண்ட் புளோக்கில் தரை ஓடுகள் சிதறிய சம்பவம் - பழுதுபார்ப்புப் பணிகள் மும்முரம்

வாசிப்புநேரம் -
சுவா சூ காங் கிரசண்டில் (Choa Chu Kang Crescent) உள்ள புளோக் 691Aஇன் கீழ்த்தளத்தில் தரை ஓடுகள் சிதறியதைக் காட்டும் காணொளி Tiktokஇல் பரவலாகப் பகிரப்படுகிறது.

அது குறித்து மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு அலெக்ஸ் யாம் (Alex Yam) Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்துப் புகார் கிடைத்தவுடன் நகரமன்ற ஊழியர்கள் அவ்விடத்திற்குச் சென்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிதறிக் கிடந்த தரை ஓடுகளை அகற்றியதாக அவர் சொன்னார்.

அங்குள்ள குடியிருப்பாளர்கள் வழக்கம்போல் மின்தூக்கியைப் பயன்படுத்துவதற்காகக் கேன்வஸ் ஷீட் (canvas sheet) தரையில் போடப்பட்டிருக்கிறது.

தரை ஓடுகள் மாற்றப்படும் என்றும் பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைய சுமார் 2 வாரங்கள் ஆகும் என்றும் திரு யாம் தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு அவர் குடியிருப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

அத்துடன் அங்கு நடக்கும்போது பாதுகாப்பாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்