Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் - 'கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் BTO வீடு கிடைப்பது அதிர்ஷ்டத்தைப் பொறுத்திருக்கிறது'

வாசிப்புநேரம் -
தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளுக்குக் (BTO) காத்திருப்போர் இனி மறுவிற்பனை வீடுகளுக்கு மாறுவதற்குச் சாத்தியம் இருப்பதாகச் சொத்து முகவர்கள் கூறுகின்றனர்.

வரவுசெலவுத் திட்டத்தில் வீடு வாங்குவோருக்காக நேற்று (பிப்ரவரி 14) சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

அவை:
  • BTO வீடுகளுக்கு விண்ணப்பம் செய்வோர் கூடுதலாக ஒரு வாய்ப்பைப் பெறுவர்.
  • முதல்முறை மறுவிற்பனை வீடு வாங்கும் குடும்பங்களுக்குக் கூடுதலாக 30,000 வெள்ளி வரை மத்திய சேம நிதி மானியம் வழங்கப்படும்.
'மானியத்தால் மாற்றம் வரலாம்'

கடந்த ஈராண்டுகளாக மறுவிற்பனை வீடுகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், புதிய நடவடிக்கைகளை வரவேற்பதாகச் சொத்து முகவர்கள் கூறினர்.

"மக்கள் இனி BTO வீடுகளை நம்பியிருக்காமல் மறுவிற்பனை வீடுகளை நாடலாம். இப்போது BTO வீடுகளுக்குக் காத்திருக்க வேண்டிருப்பதால் அவர்கள் மறுவிற்பனை வீடுகளை மேலும் சிறந்த தெரிவாகக் கருதலாம்," என்று வீட்டு முகவர் லதா கண்ணன் சொன்னார்.

BTO வீட்டுக்குக் காத்திருப்பதை விரும்பாத பிரதீப், இது நல்ல உதவி என்று நம்புகிறார்.

"BTO வீடுகளுக்குக் காத்திருக்கவேண்டும்... பெற்றோருக்கு அருகில் உள்ள மறுவிற்பனை வீடுகளின் விலை மிகவும் அதிகம்..இந்நிலையில், சவாலைச் சமாளிக்க மானியம் உதவலாம்," என்றார் அவர்.

BTO வீட்டுக்கு கூடுதல் வாய்ப்பு அனுகலமா?

இதனால் மேலும் அதிகமான இளம் தம்பதிகளும் குடும்பங்களும் வீடு வாங்க இந்த அறிவிப்பு வகைசெய்யும் என்றார் சொத்து முகவர் ஃபெளஸியா பேகம் கூறினார்.

"வீடு கிடைப்பது எல்லாம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்திருக்கிறது. கூடுதலாக ஒரு முறை விண்ணப்பம் செய்யமுடிவது நல்லது தான்... ஆனால் வீடு கிடைக்கும் என்று சொல்லமுடியாது," என்கிறார் வீட்டுக்காகக் காத்திருக்கும் காலிட்.

BTO வீட்டுத் திட்டத்தின் வழி கீழ் தளத்தில் வீடு கிடைத்துள்ள கலைவாணிக்கு,

"மேலும் ஒரு முறை விண்ணப்பம் செய்யமுடிந்திருந்தால் உயர் தளத்தில் வீடு கிடைத்திருக்கலாம்," என்ற ஆதங்கம்.

"இந்த ஒரு கூடுதல் வாய்ப்புக்காக, மறுவிற்பனை வீடு வாங்க நினைப்போர் BTO வீட்டுக்கு மாற விரும்புவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்,"

என்று சொத்து முகவர்கள் கூறினர்.

அடுத்த ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படக்கூடிய வீடுகளை அறிமுகம் செய்யத் திட்டம் இருப்பதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) அண்மையில் கூறியிருந்தார்.

BTO வீடுகள் விரைவில் கிடைப்பதற்கு அரசாங்கம் வழி செய்துள்ளது. என்றாலும் அவற்றுக்கான காத்திருக்கும் நேரத்தை வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை என்பது முகவர்களின் கருத்து.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்