சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"நிச்சயமற்ற பொருளியல் - வேலையைத் தக்கவைத்துக்கொள்ள திறன் மேம்பாடு முக்கியம்"
வாசிப்புநேரம் -

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளில் வேலையில் இருந்தோரின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் முதல்முறையாகக் குறைந்துள்ளது.
2020ஆம் ஆண்டு 2ஆம் காலாண்டுக்குப்பின் அது இப்போது சரிந்திருக்கிறது.
பொருளியல் மந்தமாகவுள்ளதை அது குறிப்பதாக மனிதவளத் துறை நிபுணர் அரவிந்த் மதுசூதனன் கூறினார்.
"பயணம், விமானத்துறை வளர்ச்சிக் கண்டாலும் உற்பத்தி, சேவை ஆகிய துறைகளில் சவால்கள் உள்ளன."
"இந்த ஆண்டு இறுதிவரை பொருளியல் வளர்ச்சி மெதுவாக இருக்கக்கூடும். ஆனால் அது தற்காலிகச் சூழலே."
என்றார் திரு. அரவிந்த்.
எனினும் ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்வதிலும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதிலும் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் என்று அவர் சொன்னார்.
"தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரும்பாலான துறைகள் பாதிக்கப்படும். வேலையைத் தக்கவைத்துக்கொள்ளத் திறன் மேம்பாடு மிகவும் முக்கியம்."
என்று திரு. அரவிந்த் குறிப்பிட்டார்.
பணவீக்கம், உயர்ந்திருக்கும் வட்டி விகிதம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் செலவைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாக Phoenix consultants & Advisors Pte ltd நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கிடா பத்மனாபன் தெரிவித்தார்.
"ஒரேவகையான செயல்முறையைக் கொண்ட, அதாவது routine வேலைகளைத் தொழில்நுட்பம் எடுத்துக்கொள்கிறது."
"அதனால் திறன் மேம்பாடு மிகவும் அவசியம்."
என்றார் திரு. பத்மனாபன்.
உக்ரேன் போர், தைவான் நீரிணையில் பதற்றம், அமெரிக்கத் தேர்தல் என உலக அரசியல் சூழலால் பொருளியல் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"குறைந்தது அடுத்த ஓராண்டுக்கு பொருளியல் நிச்சயமற்றதாகவே இருக்கும்."
"பல ஆண்டுகளில் காணாத அளவு வட்டி விகிதம் உயர்ந்திருக்கிறது. அதனால் பல நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன."
"எனினும் வேலையில் இருக்கும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறையாது. அது தற்காலிகச் சூழலே"
என்றார் திரு. பத்மனாபன்.
புதிய திறன்களைக் கற்பது, திறன்களை மேம்படுத்திக்கொள்வது ஆகியவைமூலம் அதைக் கடந்துவிடலாம் என்றார் அவர்.