Skip to main content
புதிய BTO வட்டாரங்களில் அடிப்படை வசதிகள் சீக்கிரம் வரும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புதிய BTO வட்டாரங்களில் அடிப்படை வசதிகள் சீக்கிரம் வரும்

வாசிப்புநேரம் -
தேவைக்கு ஏற்பக் கட்டி விற்கப்படும் (BTO) புதிய வீடமைப்பு வட்டாரங்களில் அடிப்படை வசதிகள் இன்னும் விரைவாக அறிமுகம் காணவுள்ளன.

3,000 அல்லது அதற்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்டுள்ள புதிய BTO வட்டாரங்களுக்கு அந்த மாற்றம் பொருந்தும்.

தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) இன்று அதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2024இல் உருவாக்கப்பட்ட பலதரப்பு அரசாங்க அமைப்புகள் அடங்கிய BTO ஒருங்கிணைப்புக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப அந்த மாற்றம் செய்யப்படுகிறது.

முதிர்ந்த வட்டாரங்களைவிடப் புதிய வட்டாரங்களில் அமையும் BTO வீடுகளின் அருகாமையில் குறைவான வசதிகள் உள்ளன என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தன.

புதிய BTO வட்டாரங்களில் உணவுக் கடைகள், பேருந்துச் சேவைகள், கூரைவேய்ந்த நடைபாதை, பிள்ளை பராமரிப்புச் சேவைகள் ஆகியவற்றை விரைவாக அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

இன்னும் திட்டமிடும் நிலையில் உள்ள எதிர்கால BTO வட்டாரகளில் அத்தகைய வசதிகள் தொடக்கத்திலிருந்தே கருத்தில்கொள்ளப்படும் என்று அறிக்கை குறிப்பிட்டது.


 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்