Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வாடிக்கையாளர்கள் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டால் புதிய விதிமுறைகளில் சிக்கல் இருக்காது: இந்திய உணவகங்கள்

வாடிக்கையாளர்கள் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டால் புதிய விதிமுறைகளில் சிக்கல் இருக்காது: இந்திய உணவகங்கள்

வாசிப்புநேரம் -
வாடிக்கையாளர்கள் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டால் புதிய விதிமுறைகளில் சிக்கல் இருக்காது: இந்திய உணவகங்கள்

கோப்புப்படம்: முத்துஸ் கறி

சிங்கப்பூரில் இன்றுமுதல் (10 நவம்பர்) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐவர் வரை உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வியாபாரத்தைப் பெருக்க உதவும் என்று உணவக உரிமையாளர்கள் "செய்தி"யிடம் தெரிவித்தனர்.

Related article image

இருப்பினும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிசெய்ய அடையாள அட்டைகளை வாடிக்கையாளர்கள் கட்டாயம் காட்ட வேண்டும்.

வாடிக்கையாளர்கள் அதைப் புரிந்துகொண்டு நடந்தால் புதிய விதிமுறைகளில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று உணவக உரிமையாளர்கள் கூறினர்.

அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு உணவகங்களுக்கு நல்ல செய்தி என்கிறார் முத்துஸ் கறி உணவகத்தின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன்

Related article image
கோப்புப்படம்: முத்துஸ் கறி

இதற்கு முன்னர் கடையில் 50 பேர் அமர்ந்து உண்ணும் இடத்தில் மேசைக்கு இருவர் எனப் பிரிக்கப்பட்டதால் உச்ச நேரங்களில் சுமார் 20 பேர் வரைதான் உணவகங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இப்போது அந்த நிலை மாறியுள்ளது ஒரே வீட்டிலிருந்து வருபவர்களால். சில மேசைகளில் 5 பேர் வரை அமர்ந்து உண்ணலாம். 

அதனால் மேலும் சிலரை உணவகங்களுக்குள் அனுமதிக்க முடிகிறது.

இருப்பினும் அடையாள அட்டையைச் சரிபார்த்து வாடிக்கையாளர்களை அனுமதிப்பது சற்றுச் சவாலானது.

எல்லாரும் அடையாள அட்டையைக் காட்ட முன்வருவதில்லை. அதனால் சில சிரமங்கள் ஏற்படக்கூடும்

என்றார் திரு. ஸ்ரீநிவாசன்.

Related article image

புதிய விதிமுறையின் பலன் வார இறுதியில்தான் தெரியும் என்கிறார் அஞ்சப்பர் உணவகத்தின் சமையல் மேலாளர் பாண்டியராஜன்.

வார நாள்களில் குழுவாக வருவோரின் எண்ணிக்கை சற்றுக் குறைவுதான். அதனால் நாளையிலிருந்து கூட்டத்தை எதிர்பார்க்கமுடியும் என்றார் அவர்.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் அடையாள அட்டைகளில் அவர்கள் வசிக்கும் முகவரி இருக்கும். ஆனால் வேலை அனுமதிச் சீட்டில் உள்ளவர்களுக்கு முகவரி இருக்காது. 

அதனால் அவர்களின் முகவரியைச் சரியான தளத்தில் சரிபார்த்த பின்புதான் கடைக்குள் அனுமதிக்க முடியும். அதனால் அவர்கள் ஒரு சில நிமிடங்கள் காத்திருக்க நேரலாம் என்றார் திரு. பாண்டியராஜன்.

Related article image

தற்போது கடையில் ஒரு பிரிவு மேசைகளைக் குடும்பமாக வருபவர்களுக்கு எனத் தனியாக ஒதுக்கியுள்ளோம்.

வழக்கமாக வரும் வாடிக்கையாளர், குடும்பமாக வரும்போது அவர்களிடம் அடையாள அட்டை காட்டுவது கட்டாயம் என்று கூறினால் அதைக் காட்ட அவர்கள் முகம் சுளிக்கலாம்.

Related article image

இப்போது ஒரே குடும்ப உறுப்பினர்களுக்கு விதிமுறை தளர்த்தப்பட்டதுபோல் பொதுவாக 5 பேர் வரை உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி வழங்கினால் இன்னும் நன்மையாக இருக்கும் என்கின்றனர் உணவக உரிமையாளர்கள்.

புதிய விதிமுறைகளை மீறுவோருக்கும் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்களைப் போன்று பாவனை செய்து உணவகங்களில் சாப்பிடுவோருக்கும் அபராதம் விதிக்கப்படலாம்.

சோதனை மேற்கொள்ளாத உணவகங்களை உடனடியாக மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் அமாலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்