பேருந்து வரும் நேரம் - 90% சரிசெய்யப்பட்டது
This audio is generated by an AI tool.
பேருந்து வரும் நேரத்தைக் காட்டும் செயல்முறை 90 விழுக்காட்டுக்கும் மேல் சரிசெய்யப்பட்டுள்ளது.
செயல்முறை மீண்டும் நிலையாவதால் செயலிகளில் பேருந்து வரும் நேரம் தவறாகக் காட்டப்படும் சாத்தியம் குறைகிறது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் சொன்னது.
பேருந்து வரும் நேரத்தைக் காட்டும் செயல்முறை பேருந்து நிறுத்துமிடங்களிலும் சில போக்குவரத்துச் செயலிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த மாதம் 10ஆம் தேதியிலிருந்து செயல்முறையில் கோளாறு ஏற்பட்டது.
செயல்முறையைச் சீர்செய்யக் குத்தகையாளருடன் ஒத்துழைத்து வந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
4,000 பேருந்துகளில் வருகை நேரத் தகவலை அனுப்பும் கருவியைச் சரிசெய்ததாக ஆணையம் சொன்னது.