Skip to main content
நவம்பரில் சில்லறை வர்த்தகம் அதிகரித்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நவம்பரில் சில்லறை வர்த்தகம் அதிகரித்தது

வாசிப்புநேரம் -
நவம்பரில் சில்லறை வர்த்தகம் அதிகரித்தது

(படம்:REUTERS/Edgar Su)

வெளியீடு : 05 Feb 2026 07:00PM புதுப்பிப்பு : 05 Feb 2026 07:19PM
சிங்கப்பூரில் சில்லறை விற்பனை சென்ற ஆண்டின் (2025) நவம்பர் மாதம், ஆண்டு அடிப்படையில் 6.3 விழுக்காடு ஏற்றம் கண்டது.

அக்டோபர் மாதம் பதிவான 4.4 விழுக்காட்டு வளர்ச்சியைவிட இது அதிகம்.

நவம்பர் மாதம் சில்லறை விற்பனையின் மொத்த மதிப்பு 4.8 பில்லியன் வெள்ளியாக இருந்தது.

சில்லறை விற்பனையில் சுமார் 17 விழுக்காடு இணையப் பரிவர்த்தனையில் பதிவானது.

இது கடந்த அக்டோபர் மாதம் பதிவான 14.5 விழுக்காட்டைவிட அதிகம்.

Singles' Day விற்பனை, Black Friday விற்பனை போன்றவை நவம்பர் மாதம் விற்பனை அதிகரிக்கக் காரணமாக இருந்தன.

உணவு, பானச் சேவைகளும் நவம்பர் மாதம் சுமார் 2.5 விழுக்காடு வளர்ச்சி கண்டன.

அந்தத் துறையில் மொத்தம் 1 பில்லியன் வெள்ளி செலவுசெய்யப்பட்டது.

உணவகங்களில் விற்பனை சற்று இறக்கம் கண்டது.

இருந்தபோதும் விரைவு உணவுக் கடைகளிலும் காப்பிக் கடைகளிலும் நல்ல வளர்ச்சி பதிவானது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்