சமூக ஊடகத் தளங்களில் வர்த்தகம் செய்வது எப்படி?
(படம்: 8 World)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் சில்லறை வர்த்தகக் கடைகள் மின்னிலக்கத்தைப் பயன்படுத்தி அவற்றின் வியாபாரத்தை விரிவுபடுத்தப் புதிய உடன்பாடு செய்துகொள்ளப்பட்டுள்ளது.
இணையம்வழி பொருள்களை விற்க இன்னும் எந்தெந்த அம்சங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை நுணுக்கமாய் அதன்வழி கற்றுக்கொள்ளலாம்.
சிங்கப்பூர் சில்லறை வர்த்தகர்கள் சங்கம், TikTok Shop நிறுவனம், சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு ஆகியன இன்று அந்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன.
மூன்று முக்கிய அம்சங்களில் திட்டம் கவனம் செலுத்தும்.
முதலில் காணொளியில் பொருளை எப்படி அறிமுகப்படுத்தலாம்?
பொருளைப் பற்றிப் பேசும் அதே நேரம் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு தொடர்பிலிருப்பது முதலியன சொல்லிக்கொடுக்கப்படும்.
இரண்டாவதாக ஒவ்வொரு பொருளும் எவ்வளவு வேகமாய் விற்பனை ஆகின்றன என்பதை ஆராய்ந்து அதற்கெற்ப அவற்றின் எண்ணிக்கையைத் தயார்செய்வது.
பொருத்தமான விளம்பரங்களைத் தயாரிப்பது.
இறுதியாக இணையம்வழி பொருளை விற்கத் தேவையான தொழில்நுட்ப ரீதியான ஆதரவை வழங்குவது.
விற்பனை செய்யப்பட்ட பொருள்களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்து ஆராய்வது.
சில்லறை வர்த்தகத்துறை ஊழியர்களின் வேலையை மறுவடிவமைக்கவும் அடிப்படை மின்னிலக்க வர்த்தகப் பயிற்சிகளை வழங்கவும் திட்டம் உதவுமென நம்பப்படுகிறது.