Skip to main content
ஓய்வுக்கால வயது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஓய்வுக்கால வயது - 64க்கு உயர்த்தப்படுகிறது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் ஏற்கனவே திட்டமிட்டபடி, ஊழியர்களின் ஓய்வுக்கால வயது 64க்கு உயர்த்தப்படுகிறது.

மறுவேலை வாய்ப்புக்கான வயது வரம்பு 69 வயதுக்கு உயரும்.

அந்த மாற்றங்கள் ஜூலை முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வருவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

அதன்வழி, திட்டமிட்டபடி 2030ஆம் ஆண்டுக்குள் ஓய்வுக்கால வயதை 65க்கும் மறுவேலை வாய்ப்புக்கான வயது வரம்பை 70க்கும் உயர்த்த முடியும் என்றார் டாக்டர் டான்.

நிறுவனங்கள் அனுபவம்பெற்ற ஊழியர்களை வைத்துக்கொள்வதற்கு அந்த ஏற்பாடு உதவும்.

மூத்த ஊழியர்கள் நீண்ட காலத்திற்குப் பணியாற்றுவதோடு ஆக்கபூர்வமாகவும் பணியாற்றவேண்டும்.

அதற்குரிய நீக்குப்போக்குத் தன்மை உருவாக்கப்படவேண்டும் என்று அவர் கூறினார்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்