நிறுவனங்கள் ஆட்குறைப்பைப் புதிய வாய்ப்புப் போல் காட்டுவது அக்கறைக்குரியது: NTUC
வாசிப்புநேரம் -
(படம்: CNA/Liew Zhi Xin)
உள்ளூரில் ஒருவர் ஆள்குறைப்புச் செய்யப்பட்டால், அதே நிறுவனம் வெளிநாட்டில் அவருக்குப் புதிய அல்லது அதே போன்ற வேலையைக் கொடுத்தாலும் அது ஆட்குறைப்புத் தான் என்று கூறப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சும், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசும் அதனை வலியுறுத்தின.
ஆட்குறைப்பைப் புதிய வாய்ப்புப் போல் காட்டும் போக்கு அக்கறைக்குரியது என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் CNA-விடம் தெரிவித்தது.
CNA வினவியபோது மனிதவள அமைச்சும் சிங்கப்பூரில் ஒரு வேலை இல்லாமல் ஆகிவிட்டது அல்லது வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டது என்றால் சம்பந்தப்பட்ட ஊழியர் ஆட்குறைப்புச் செய்யப்பட்டதாகவே பொருள்படும் என்றது.
அண்மையில் சுவீடனின் H&M நிறுவனம் அதன் தென்கிழக்காசியத் தலைமையகத்தை சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு மாற்ற முடிவெடுத்தது.
சிங்கப்பூர் ஊழியர்கள் வெளிநாட்டுக் கிளைகளில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனம் சொன்னது.

ஆதாரம் : CNA