Skip to main content
மோதிரம் காணவில்லை... சிப்பந்திகள் இருக்க பயம் ஏன்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

மோதிரம் காணவில்லை... சிப்பந்திகள் இருக்க பயம் ஏன்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) விமானச் சிப்பந்திகள் ஒரு பயணியின் மோதிரத்தை மீட்டுத் தந்துள்ளனர்.

மோதிரம் இருக்கை இடுக்கில் விழுந்தது

கிட்டத்தட்ட 250 வெள்ளி மதிப்புள்ள மோதிரம் தமக்கு மிகவும் நெருக்கமானது என்று பயணி குறிப்பிட்டார்.

விமானம் சிங்கப்பூரிலிருந்து பிலிப்பீன்ஸுக்குச் சென்றுகொண்டிருந்தது.

கை சுத்திகரிப்புத் திரவத்தைத் தடவுவதற்காகப் பயணி மோதிரத்தைக் கழற்றினார்.

மீண்டும் அணிய முயன்றபோது இருக்கை இடுக்கில் விழுந்தது.

சிப்பந்தி ஒருவர் Chopstick குச்சியை வைத்து மோதிரத்தை மீட்கலாம் என்று பயணியிடம் கூறினார்.

அந்த முயற்சியின்போது மோதிரம் மேலும் கீழிறங்கிச் சிக்கிக்கொண்டது.

பின்னர் சிப்பந்திகள் மீண்டும் முயற்சி செய்தனர்.

Chopstick குச்சி, ஹேர் கிளிப் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தித் தூண்டில் போன்ற கோலைத் தயார் செய்தனர்.

சிப்பந்திகள் தரையில் படுத்து மோதிரத்தை இருக்கையின் அடியிலிருந்து மீட்க முயன்றனர்.

10 நிமிடங்களில் மோதிரம் கைக்கு வந்தது.

பயணி சிப்பந்திகளின் பொறுமையையும் கனிவையும் பாராட்டினார்.

அவர்களுக்குப் பலமுறை நன்றி தெரிவித்தார்.
ஆதாரம் : Others/8 World

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்