Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரசாங்க அதிகாரி போல் ஆள்மாறாட்டம் - $120 மில்லியன் பறிபோனது

வாசிப்புநேரம் -
அரசாங்க அதிகாரி போல் ஆள்மாறாட்டம் -  $120 மில்லியன் பறிபோனது

(படம்: Envato Elements)

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகச் காவல்துறையும் சிங்கப்பூர் நாணய வாரியமும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.

அத்தகையச் சம்பவங்களில் மோசடிக்காரர்கள், வங்கி அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளைப் போல நடித்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை குறைந்தது 1,100 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்தகைய மோசடிச் சம்பவங்களில் குறைந்தது 120 மில்லியன் வெள்ளியை மக்கள் இழந்தனர்.

சென்ற ஆண்டுடன் (2023) ஒப்பிடுகையில் அது ஒரு மடங்கு.

சென்ற ஆண்டு அத்தகைய 680 சம்பவங்கள் பதிவாயின. அதில் மக்கள் குறைந்தது 67 மில்லியன் வெள்ளியைப் பறிகொடுத்தனர்.

வங்கி அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிச் சம்பவங்களில் மோசடிக்காரர், DBS, OCBC, UOB, Standard Chartered வங்கி அதிகாரியைப் போல நடித்து பாதிக்கப்பட்டவருக்குக் கடன்பற்று அட்டை தரப்பட்டுள்ளதாகக் கூறுவார்.

அல்லது பாதிக்கப்பட்டவரின் பெயரில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நிகழ்ந்ததாகக் கூறுவார்.

பிறகு பாதிக்கப்பட்டவர் அதனை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறுவார்.

பாதிக்கப்பட்டவர், தமக்கு வங்கிப் பரிவர்த்தனைகளைப் பற்றித் தெரியாது என்று கூறிய பிறகு, காவல்துறை அதிகாரி அல்லது நாணய வாரியத்தின் அதிகாரியைப் போல நடிக்கும் மற்றொரு மோசடிக்காரர், பாதிக்கப்பட்டவரிடம் பேசுவார்.

அவர்கள் உண்மையில் அரசாங்க அதிகாரிகள் என்று மக்களை நம்ப வைக்கப் பல உத்திகளைப் பயன்படுத்துவார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவர்களைப் பயமுறுத்துவார்கள்.

பின்னர் விசாரணையில் கைகொடுக்கப் பணத்தை அவர்களுக்கு அனுப்புமாறு மோசடிக்காரர்கள் சொல்வார்கள்.

வங்கிகள் தொலைபேசியில் அழைத்து அதை அரசாங்க அதிகாரியிடம் மாற்றி விடுவதில்லை என்பது நினைவூட்டப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்