Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சம்பள உயர்வை நிலைநாட்டவும் உணவு இறக்குமதிகளை விரிவுபடுத்தவும் சிங்கப்பூர் முயற்சி

விலைவாசி உயர்வுக்கு இடையே, அரசாங்கம் சம்பள வளர்ச்சியை நிலைநாட்டவும் உணவு இறக்குமதிகளை விரிவுபடுத்தவும் முயற்சி எடுத்துவருகிறது.

வாசிப்புநேரம் -
சம்பள உயர்வை நிலைநாட்டவும் உணவு இறக்குமதிகளை விரிவுபடுத்தவும் சிங்கப்பூர் முயற்சி

(படம்: CNA/Calvin Oh)

விலைவாசி உயர்வுக்கு இடையே, அரசாங்கம் சம்பள வளர்ச்சியை நிலைநாட்டவும் உணவு இறக்குமதிகளை விரிவுபடுத்தவும் முயற்சி எடுத்துவருகிறது.

வர்த்தக, தொழில் துணையமைச்சர் லோ யென் லிங் (Low Yen Ling) நாடாளுமன்றத்தில் அதனைக் கூறினார்.

வெளிநாடுகளின் விலைவாசி உயர்வால் சிங்கப்பூர் நெருக்குதலை எதிர்நோக்கக்கூடும் என்று அவர் சொன்னார்.

உலக அளவில் எரிசக்தி விலைகள் அதிகரிக்கும் வேளையில், சரக்குப் போக்குவரத்தில் தடங்கல்கள் நீடிக்கின்றன. பல்வேறு பொருள்களுக்குப் போதிய இருப்பும் இல்லை.

அச்சூழல் இன்னும் சிறிது காலத்திற்குத் தொடரும் என்று திருவாட்டி லோ கூறினார்.

இருப்பினும், விலை ரீதியான நெருக்குதல் மெல்ல மெல்லத் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் அளவில் பொருளியல் நடவடிக்கை அதிகரிக்கும் வேளையில் ஊழியர்களுக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்று திருவாட்டி லோ சொன்னார்.

சம்பள உயர்வு தொடர்ந்து முன்னேற்றம் காணலாம்.

கிருமிப்பரவல் சூழல் நிலையாகும் வேளையில் பயனீட்டாளர்களின் தேவை மேம்படக்கூடும் என்று அவர் கூறினார்.

எனவே, சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் இவ்வாண்டு முற்பாதியில் அதிகரித்துப் பிற்பாதியில் தணியும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்