சிங்கப்பூர் trending
ரிவர்வேல் மாலில் அறிவிப்புப் பலகை விழுந்தது -10 வயதுச் சிறுவன் காயம்
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்: TikTok/yuhui1748
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
செங்காங் வட்டாரத்தில் உள்ள ரிவர்வேல் மாலில் (Rivervale Mall) அறிவிப்புப் பலகை விழுந்ததில் 10 வயதுச் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது.
சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான்.
சம்பவம் ஜூன் 20ஆம் தேதி Food Junction உணவுக் கடையில் நடந்தது.
அது குறித்துக் காலை சுமார் 10.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப்படை தெரிவித்தது.
விழுந்து கிடந்த அறிவிப்புப் பலகையையும் சுற்றிலும் சிதறிக் கிடந்த பொருள்களையும் ஒருவர் காணொளியாக எடுத்து TikTok தளத்தில் பதிவிட்டார்.
ரிவர்வேல் கடைத்தொகுதியுடன் இணைந்து சிறுவனுக்கு உதவி வழங்கியதாக Food Junction உணவுக்கடை சொன்னது.
சிறுவன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி குணமடைந்துவருவதாக அது கூறியது.
சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட உணவுக்கடை சம்பவத்துக்கான காரணத்தை ஆராய்வதாகத் தெரிவித்தது.

ஆதாரம் : Others