வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சாலைப் பாதுகாப்புப் பாடம்
வாசிப்புநேரம் -
படம்: NTUC
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம், பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் சாதனங்களைக் கொண்டு போகும் வாகனங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் தெளிவாக இருக்கவேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.
தற்போது இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாதது பயணங்களின்போது ஆபத்தை விளைவிப்பதாக நிலையம் சொன்னது.
போக்குவரத்து, பாதுகாப்பு தரநிலைகள் மேம்பட்டிருந்தாலும் அன்றாடப் பயணங்களில் ஊழியர்களுக்குத் தொடர்ந்து ஆபத்து இருப்பதாக அது கூறியது.
நிலையம் அதன் முதல் சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் சுமார் ஐயாயிரம் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூருடைய சாலை விதிகளை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டதாகச் சொன்னார், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊழியர்.
அதை எப்படி மதித்து நடக்கவேண்டும் என்பது மிக எளிய முறையில் விளக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
சாலையைக் கடப்பதில் சற்று மெத்தனமாக நடந்துகொண்ட தனக்கு நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அந்த மாதிரியான தவறுகளைச் செய்யக்கூடாது என்பது புரிந்ததாகவும் அவர் கூறினார்.
சாலைப் பாதுகாப்பு மட்டுமின்றி ஊழியர்களின் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்தவும் நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவதாக வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் சொன்னது.

ஆதாரம் : Mediacorp Seithi