Skip to main content
யீஷூனில் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

யீஷூனில் விபத்து - 8 வயதுச் சிறுமி உட்பட நால்வர் மருத்துவமனையில்

வாசிப்புநேரம் -
யீஷூனில் விபத்து - 8 வயதுச் சிறுமி உட்பட நால்வர் மருத்துவமனையில்

படம்: Instagram/sgfollowsall

வெளியீடு : 27 May 2026 07:02PM புதுப்பிப்பு : 27 May 2026 08:15PM

யீஷூனில் (Yishun) நடந்த விபத்தில் 4 பேர் காயமுற்றனர்.

வேன், லாரி, மோட்டார் சைக்கிள் என 3 வாகனங்கள் விபத்தில் சிக்கியதாக சிங்கப்பூர்க் காவல்துறை 'செய்தி'யிடம் தெரிவித்தது.

காயமுற்றவர்களில் இருவர் 46 வயது லாரி ஓட்டுநரும் அவருடன் பயணம் செய்த 68 வயதுப் பெண்ணும்.

மேலும் இருவர், 45 வயது மோட்டார் சைக்கிளோட்டி, அவர் ஏற்றியிருந்த 8 வயதுப் பெண் பிள்ளை என்று காவல்துறை தகவல் தந்தது.

விபத்து நேற்று பிற்பகல் 3.20 மணியளவில் யீஷூன் ரிங் ரோட்டில் (Yishun Ring Road) நடந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை 'செய்தி'யிடம் சொன்னது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்றதாக அது சொன்னது.

விபத்தில் சிக்கிய அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர்.

நால்வரில் ஒருவர் KK மகளிர், சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

மேலும் மூவர் கூ தெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

வேனை ஓட்டிய 24 வயதுப் பெண் விசாரணைக்கு உதவி வருகிறார்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்