Skip to main content
தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு (EBRC)
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு (EBRC)- அதன் பங்கு என்ன?

வாசிப்புநேரம் -
தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு (EBRC)- அதன் பங்கு என்ன?

படம்: CNA/Syamil Sapari

Elecotoral Boundaries Review Committee (EBRC) எனும் தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு எதிர்வரும் தேர்தலுக்கான வாக்காளர் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

குழு ஜனவரி 22ஆம் தேதி அமைக்கப்பட்டது.

குழுவை அமைக்குமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது.

மறுஆய்வுக் குழுவின் பங்கு என்ன?

சிங்கப்பூரின் பல பகுதிகளில் மக்கள் தொகை மாறியிருக்கலாம்..

புதிய வீடுகள் கட்டப்பட்டிருக்கலாம்..

அதற்கேற்ப மறுஆய்வுக் குழு எதிர்வரும் தேர்தலுக்கான தேர்தல் தொகுதி எல்லைகளை முடிவுசெய்யும்.

புதிய தேர்தல் தொகுதி எல்லைகளை வகுக்கும்போது குழு முந்தைய தேர்தல் முடிவுகளையோ வாக்காளர்களின் விவரங்களையோ ஆராய்வதில்லை.

குழுவில் யாரெல்லாம் இருப்பர்?

அரசாங்க ஊழியர்கள் குழுவில் உள்ளனர்.

தலைவர் - பிரதமரின் செயலாளர்

உறுப்பினர் - வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

உறுப்பினர் - சிங்கப்பூர் நில ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

உறுப்பினர் - புள்ளிவிவரத் துறையின்
தலைமை புள்ளியியல் நிபுணர்

செயலாளர் - தேர்தல் துறையின் தலைவர்

குழுவின் பணி என்ன?

பொதுவாக மறுஆய்வு முடிவுகளை வெளியிட குழுவுக்குக் காலக்கெடு ஏதுமில்லை.

இம்முறை குழு சுமார் 7 வாரங்களுக்குப் பிறகு அதன் பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

வாக்காளர்கள் வரைபடத்தில் உள்ள மாற்றங்களை அறிக்கை விவரமாகத் தெரிவிக்கும்.

தீவெங்கும் எத்தனை குழுத்தொகுதிகள், தனித்தொகுதிகள் இருக்கும், எத்தனை நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டி இருக்கும் ஆகிய விவரங்கள் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்