ஒரே இடத்தில் 70க்கும் மேற்பட்ட வகை ரோஜாப்பூக்கள் காண வேண்டுமா... கரையோரப் பூந்தோட்டத்திற்குச் செல்லுங்கள்

(படம்: Gardens by the Bay)
சிங்கப்பூர்க் கரையோரப் பூந்தோட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட வகை ரோஜாப்பூக்கள் குவிந்துள்ளன.
கரையோரப் பூந்தோட்டம் இத்தாலியத் தூதரகத்துடன் செய்துகொண்ட ஏற்பாட்டின் ஒருபகுதியாகப் பல ரோஜாக்கள் பூந்தோட்டத்தின் Flower Dome-ஐச் சென்றடைந்துள்ளன.
சிங்கப்பூரில் முதன்முறையாகக் காட்சியளித்துள்ள ஒரு வகை ரோஜாவிற்கு "அமைதியின் ஒளி" என்று பெயரிடப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 70 ஆண்டுகால அமைதியைக் குறிக்கும் வண்ணம் இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாம் நிதி, தேசிய வளர்ச்சி அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா 'Rose Romance ' என்ற தலைப்பில் மலர்க்காட்சியைத்
தொடங்கிவைத்தார்.
ஜூன் மாதத்தில் இலவச நிகழ்ச்சிகளை மக்கள் கண்டு ரசிக்கலாம். மலர்க் கண்காட்சி ஜூன் 12 ஆம் தேதி வரை நடைபெறும்.
வண்ண வண்ண வசீகர நிறங்களுடன் இருக்கும் ரோஜாப்பூக்களை காண ஆசையா... விரையுங்கள் கரையோரப் பூந்தோட்டத்திற்கு...