Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Resorts World Sentosa நிறுவனமும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து ஈடுபடும் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு

Resorts World Sentosa நிறுவனமும், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுக்கூடத்தை அமைக்கவுள்ளன.

வாசிப்புநேரம் -

Resorts World Sentosa நிறுவனமும், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுக்கூடத்தை அமைக்கவுள்ளன.

பல்லுயிர்ப் பராமரிப்புப் பற்றியும் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகள் குறித்தும் அங்கு ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.

'சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030'க்கும் செந்தோசா தீவில் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றிலும் தவிர்க்கும் முயற்சிக்கும் அது பங்களிக்கும்.

நீடித்த நிலைத்தன்மை கொண்ட பயணத்துறையை உருவாக்கும் சிங்கப்பூரின் இலக்கை எட்டுவதற்குப் புதிய முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வின்வழி சிங்கப்பூரின் Southern Islands வட்டாரத்தில் பல்லுயிர்ப் பராமரிப்புக் குறித்த நடவடிக்கைகளை மேம்படுத்தவும் முயற்சி எடுக்கப்படும்.

5 ஆண்டு நீடிக்கும் பங்காளித்துவ ஆய்வு முயற்சிகளுக்கு 10 மில்லியன் வெள்ளி நிதியளிக்க Resorts World Sentosa உறுதிகொண்டுள்ளது.
-CNA/lk(ac) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்