Skip to main content
$3பில்லியன் பண மோசடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

$3பில்லியன் பண மோசடி - மேலும் 14 சொகுசு வீடுகளும் ஓர் அலுவலகமும் ஏலத்திற்கு வரும்

வாசிப்புநேரம் -
$3பில்லியன் பண மோசடி - மேலும் 14 சொகுசு வீடுகளும் ஓர் அலுவலகமும் ஏலத்திற்கு வரும்

படம்: CBRE

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 03 Sep 2026 02:02PM புதுப்பிப்பு : 03 Sep 2026 02:48PM

சிங்கப்பூரில் 3 பில்லியன் வெள்ளி பண மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மேலும் 14 ஆடம்பர வீடுகளும் ஓர் உயர்தர அலுவலகமும் மாதம் ஏலத்திற்கு வரும்.

ரிவர் வேலி (River Valley), ஆர்ச்சர்ட் (Orchard) போன்ற முக்கியப் பகுதிகளில் அந்த வீடுகள்.
அமைந்துள்ளன.

அவை, Edmund Tie, Knight Frank ஆகிய சொத்துச் சந்தை நிறுவனங்களால் ஏலம் விடப்படும்.

இன்றைய நிலவரப்படி, மொத்தம் 25 சொத்துகள் ஏலத்திற்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.

செப்டம்பர் 23ஆம் தேதி South Beach Residences, 8 Saint Thomas, Paterson Suites ஆகியவற்றில் உள்ள வீடுகளை Edmund Tie நிறுவனம் ஏலம் விடவுள்ளது.

பீச் ரோட்டில் (Beach Road) அமைந்துள்ள South Beach Residencesஇல் உள்ள ஐந்து வீடுகள் 4.45 மில்லியன் வெள்ளி முதல் 25.32 மில்லியன் வெள்ளி வரை விலை போகலாம்.

செப்டம்பர் 17ஆம் தேதி Suntec Tower Oneஇல் உள்ள அலுவலகத்தையும் Sloane Residences, Gramercy Park ஆகியவற்றில் உள்ள வீடுகளையும் Knight Frank நிறுவனம் ஏலத்துக்கு விடும்.

Knight Frank, Edmund Tie நிறுவனங்களைத் தவிர்த்து, Martin Modern, Wallich Residence ஆகியவற்றில் உள்ள 10 ஆடம்பரக் கூட்டுரிமை வீடுகளின் ஏலத்தை நடத்த SRI நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

அவை 2.238 மில்லியன் வெள்ளி முதல் 6.78 மில்லியன் வெள்ளி வரை விலை போகலாம்.

 
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்