Skip to main content
$3 பில்லியன் மோசடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

$3 பில்லியன் மோசடி - பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள், பொருள்கள் ஏலத்தில்

வாசிப்புநேரம் -
$3 பில்லியன் மோசடி - பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள், பொருள்கள் ஏலத்தில்

படம்: Hotlotz

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் 3 பில்லியன் வெள்ளி பண மோசடியில் பறிமுதல் செய்யப்பட்ட ஆடம்பரப் பொருள்களும் சொத்துகளும் ஏலத்தில் விடப்படவுள்ளன.

அடுத்த மாதம் 7 ஆம் தேதி ஏலம் தொடங்கும்.

1,000க்கும் மேற்பட்ட ஆடம்பரப் பொருள்களும் 80 சொத்துகளும் விற்பனைக்கு விடப்படும்.

Deloitte கணக்காய்வு நிறுவனம் அந்தத் தகவலைத் தெரிவித்தது.

அடுத்த ஆண்டு முற்பாதி முடியும்வரை பொருள்களும் சொத்துகளும் ஏலத்தில் விற்கப்படும்.

Hotlotz நிறுவனம் ஆடம்பரப் பொருள்களின் ஏலத்தை நடத்தும்.

SRI, Edmund Tie & Company, Knight Frank ஆகிய நிறுவனங்கள் இணைந்து சொத்துகளின் ஏலத்தை நடத்தும்.

2023 ஆகஸ்ட்டில் சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் சட்டவிரோதச் சூதாட்டக் கும்பல் பிடிபட்டது.

அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனையை நிறைவு செய்த பிறகு அவர்கள் அனைவரும் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்