Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சிங்கப்பூர் ஆயுதப்படை தினத்தையொட்டி சிறப்பு அணிவகுப்பு

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் ஆயுதப்படை தினத்தையொட்டி, SAFTI ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பில் அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துகொண்டார்.

போர்க்காலப் படைவீரர்கள், முழு நேர தேசியச் சேவையாளர்கள், ராணுவப் படையினர் என 2,000க்கும் அதிகமானோர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

தேசியச் சேவையின் 55ஆம் ஆண்டு நிறைவையும் அணிவகுப்பு அனுசரித்தது.

ஆகச் சிறந்த போர்க் குழு, முதலாம் மின்னல் படைக் குழு, ஆகச் சிறந்த பிரிவு, ஆகச் சிறந்த தேசியச் சேவைக் குழு முதலியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தேசியச் சேவையாளர்களின் தலைசிறந்த பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், 19 வீரர்கள் 'இவ்வாண்டின் தேசியச் சேவையாளர்' விருது வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

அவர்களில் சுரேந்திரநாத்தும் ஒருவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa