The Star Vista கடைத்தொகுதியில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

படம்: Singapore Armed Forces
சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறப்புச் செயலாக்கப் பணிக் குழு The Star Vista கடைத்தொகுதியில் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி ஒன்றை வழிநடத்தியுள்ளது.
ஆயுதப்படையின் தயார்நிலையைச் சோதிப்பதற்கு அந்தப் பயிற்சி நடத்தப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.
வெவ்வேறு மிரட்டல்கள் கையாளப்படும் விதத்தை வலுப்படுத்தவும் பயிற்சி உதவுவதாக அது குறிப்பிட்டது.
COVID-19 சூழலிலும்கூட ஆயுதப்படை பயிற்சிகளை மேற்கொள்வதாக அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரின் அரசுரிமையையும் பாதுகாப்பையும் கட்டிக்காக்க படை தயார்நிலையில் இருப்பதைப் பயிற்சிகள் உறுதிசெய்வதாக அமைச்சு குறிப்பிட்டது.