Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விளையாட்டுத் துறையில் துன்புறுத்தல், தவறான பாலியல் நடத்தை ஆகியவற்றுக்கு எதிராகப் புதிய முயற்சி

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் விளையாட்டுத் துறை துன்புறுத்தலுக்கும் தவறான பாலியல் நடத்தைகளுக்கும் எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறது. 

பாதுகாப்புமிக்க விளையாட்டு  ஆணையம் புதிய குழுவை நிறுவியுள்ளது.  

துன்புறுத்தல், தவறான பாலியல் நடத்தைகள் தொடர்பான சம்பவங்கள் குறித்த புகார்களை அது மேற்பார்வையிடும். 

மனோரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் அது கண்காணிக்கும். 

எது சரியான நடத்தை எது தவறானது என்பதை வரையறுக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை ஆணையம் சுமார் ஓராண்டுக்குமுன் அறிமுகம் செய்தது. 

அதனை ஒட்டி புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

சிங்கப்பூர் விளையாட்டுத் துறையில் தவறான நடத்தைகளைக் கையாள்வதற்கு உதவும் மேலும் ஒரு முயற்சியாக இது அமைகிறது. 

அடுத்த மூவாண்டுகளுக்குக் கட்டங்கட்டமாக நடப்புக்குவரும் பாதுகாப்புமிக்க விளையாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் புதிய முயற்சி எடுக்கப்படுகிறது. 

தவறு நடப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் புதிய குழுவுக்கு இருப்பதாக பாதுகாப்புமிக்க விளையாட்டுக் கட்டொழுங்குக் குழுவின் உறுப்பினர் பால் சந்தோஷம் தெரிவித்தார். 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்