Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மறுபயனீடு செய்யக்கூடிய சீனப் புத்தாண்டு Hongbao உறைகள்

வாசிப்புநேரம் -
சீனப் புத்தாண்டுக்கு வழங்கப்படும் Hongbao எனப்படும் சிவப்பு அன்பளிப்பு உறைகளை அச்சிடும் நிறுவனங்கள், மறுபயனீடு செய்யக்கூடிய வகையில் அவற்றைத் தயாரிக்க முயற்சிகள் எடுக்கின்றன.

ஒரே முறை பயன்படுத்தப்படும் உறைகளுக்குப் பதிலாக, அலங்காரப் பொருளாகவோ, செடியாக வளரக்கூடிய வகையிலோ உறைகள் உருவாக்கப்படுகின்றன.

பாரம்பரிய Hangbaoகளைவிட விலை உயர்வாக இருந்தாலும், அவற்றின் விற்பனை ஆண்டு அடிப்படையில் 20 விழுக்காடு அதிகரித்ததாகச் சில நிறுவனங்கள் தெரிவித்தன.

தோற்றத்தில் கவர்ச்சி குறைவு என்றாலும், சுற்றுச்சூழலைப் பற்றிக் கவலை கொண்டுள்ள வாடிக்கையாளர்களை இது போன்ற மறுபயனீட்டு Hongbaoகள் ஈர்க்கின்றன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்