அமெரிக்க நகைச்சுவைக் கலைஞர் சேமி ஒபைட் POFMA உத்தரவுக்கு இணங்கவில்லை
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: Facebook/Sammy Obeid)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க நகைச்சுவைக் கலைஞர் சேமி ஒபைட் (Sammy Obeid) பொய்த்தகவலுக்கு எதிரான சட்டத்தின் (POFMA) கீழ் பிறப்பிக்கப்பட்ட திருத்த உத்தரவுக்கு இணங்கவில்லை.
Meta, X ஆகிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
பொய்த்தகவல் இருப்பதாகக் கூறப்படும் திரு ஒபைட்டின் பதிவுகளைக் காணும் சிங்கப்பூர் பயனீட்டாளர்களுக்கு அவ்விரு நிறுவனங்களும் திருத்த அறிவிப்பைப் பிறப்பிக்க வேண்டும்.
சென்ற மாதம் (ஆகஸ்ட்) 27ஆம் தேதி திரு ஒபைட்டின் Facebook, Instagram, X பதிவுகளுக்குத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தமது நகைச்சுவைப் படைப்பில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னதாகவும் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் தொடர்பான அனைத்தையும் நீக்கச் சொன்னதாகவும் திரு ஒபைட் கூறியிருந்தார்.
ஆனால் அது பொய் என்று ஆணையம் தெரிவித்தது.

ஆதாரம் : CNA