Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முன்னாள் போதைப்புழங்கிகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க மேலும் ஓர் உதவி நிலையம் திறக்கப்பட்டுள்ளது

வாசிப்புநேரம் -
முன்னாள் போதைப்புழங்கிகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க மேலும் ஓர் உதவி நிலையம் திறக்கப்பட்டுள்ளது

(படம்: Singapore Government Agency) 

சிங்கப்பூரில் முன்னாள் போதைப்புழங்கிகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க மேலும் ஓர் உதவி நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

SANA எனும் சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கம் அதன் மூன்றாவது நிலையத்தை சிங்கப்பூரின் வடமேற்குப் பகுதியில் அதிகாரபூர்வமாகத் திறந்துள்ளது.

உட்லண்ட்ஸில் உள்ள Ace The Place சமூக மன்றத்தில் அமைந்திருக்கிறது சங்கத்தின் மூன்றாவது உதவி நிலையம்.

உட்லண்ட்ஸ், மார்சிலிங், அட்மிரல்டி போன்ற வடமேற்கு வட்டாரத்தில் வசிப்போருக்குச் சேவைகளையும் திட்டங்களையும் அருகிலிருந்தே நிலையம் வழங்கமுடியும்.

உதவி தேவைப்படுவோருக்கும் குடும்பத்தினருக்கும் நிலையம் பல வழிகளில் ஆதரவு வழங்குகிறது என்று நிர்வாக இயக்குநர் திரு அப்துல் கரீம் கூறினார்

வடமேற்கு வட்டாரத்தில் உள்ள உதவி நிலையத்தின் முன்னோடித் திட்டம் 2020 ஆம் ஆண்டு தொடங்கியது.

அப்போதிலிருந்து சுமார் 300 முன்னாள் போதைப்புழங்கிகளுக்கும் குடும்பங்களுக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேலும் பலருக்கு உதவ SANA திட்டமிட்டுள்ளது.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa