Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இருந்தவாறே ஃபுஜி மலையை ஏறும் சவால் - எப்படி?

சிங்கப்பூரில் மெய்நிகர் முறையில் ஃபுஜி (Fuji) மலையை ஏறும் சவால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் மெய்நிகர் முறையில் ஃபுஜி (Fuji) மலையை ஏறும் சவால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிபர் ஹலிமா யாக்கோப் அதனை இன்று காலையில் இஸ்தானாவின் பூங்காவில் தொடங்கிவைத்தார்.

சிறப்புத் தேவையுடையோர் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் நிதி திரட்டவும் சவால் நிகழ்ச்சிக்கு YMCA நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

நிறுவனத்தைச் சேர்ந்த 8 சிறப்புத் தேவையுடையோர் அந்த சவால் நிகழ்ச்சியை வழிநடத்துகின்றனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருடன், Fort Canningஇல் நெடுந்தொலைவு நடையில் திருவாட்டி ஹலிமா கலந்துகொண்டார்.

சவால் நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புவோர், ஃபுஜி மலைக்கு நிகரான 3,800 மீட்டர் உயரம் ஏறலாம்.

அல்லது மலையின் சுற்றளவான 125 கிலோமீட்டருக்கு நடக்கவோ, ஓடவோ, மிதிவண்டி ஓட்டவோ முடியும்.

இதுவரை 120 சிங்கப்பூரர்கள் அதற்குப் பதிவு செய்துள்ளனர்.

மே மாதம் 29ஆம் தேதிவரை பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்குபெற பதிவுசெய்துகொள்ளலாம்.

சிறப்புத் தேவையுடைய இளையர்களுக்கான திட்டங்களுக்கு 250,000 வெள்ளி நிதிதிரட்ட ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்