Skip to main content
போலி அதிகாரிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

போலி அதிகாரிகள் - கைமாறும் தங்கம்

வாசிப்புநேரம் -
தங்கம் அல்லது தங்கம் தொடர்பான முதலீடுகள் சம்பந்தப்பட்ட மோசடி வழக்குகளைக் காவல்துறை தனிப்பட்ட முறையில் கணக்கிடுவதில்லை.

ஆனால், 2025இல் மட்டும் தங்கத்தைக் கேட்டு வாங்கி அதன் வழி லாபம் ஈட்டி மோசடி செய்ததாக 130 வழக்குகள் பதிவாகியுள்ளன.

உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா. சண்முகம் இதனைத் தெரிவித்தார்.

மோசடிகளில் சிக்கியவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் அதாவது சுமார் 65 விழுக்காட்டினர்
65 வயதைக் கடந்தவர்கள் என்றார் அவர்.

அரசாங்க அதிகாரிகள்போல நடித்து, விசாரணை என்ற பெயரில் முதியவர்களை ஏமாற்றித் தங்கத்தை ஒப்படைக்கச் சொல்வது மோசடிக்காரர்களின் உத்தி.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கத்தை மோசடிக்காரர்களிடம் நேரில் ஒப்படைக்கிறார்கள் அல்லது அவர்கள் சொல்லும் இடங்களில் விட்டுச் செல்கிறார்கள்.

இத்தகைய மோசடிகளைத் தவிர்க்க அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்து வருவதைத் திரு சண்முகம் சுட்டினார்.

2022ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தங்கம் அல்லது தங்கம் தொடர்பான எத்தனை மோசடிச் சம்பவங்கள் நடந்துள்ளன?

என்ன உத்தி பயன்படுத்தப்படுகிறது?

எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?

கையாளும் வழிகள் என்ன?

என நாடாளுமன்ற உறுப்பினர் வெலரி லீ (Valerie Lee) முன்வைத்த கேள்விகளுக்குத் திரு சண்முகம் எழுத்துபூர்மாகப் பதில் தந்தார்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்