மோசடிகளில் மீட்கப்பட்ட பணம் - என்ன செய்யப்படுகிறது?
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மோசடி தொடர்பான குற்றங்களில் மீட்கப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டால் அது அரசாங்க ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றப்படும்.
மூத்த அமைச்சர் கா சண்முகம் அந்தத் தகவல்களை அளித்தார்.
அரசாங்க ஒருங்கிணைந்த நிதி, அரசாங்கச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.
மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குச் செலவு செய்யப்படும் பணத்திற்கும் மோசடிச் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கும் தொடர்பில்லை என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
மோசடிகளைக் கையாள்வது உள்ளிட்ட உள்துறை அமைச்சின் கொள்கைகளை மேற்கொள்ளத் தனியாக நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
மோசடிகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட பணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டபர் டி சூஸா (Christopher de Souza) கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு திரு சண்முகம் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

ஆதாரம் : Mediacorp Seithi