Skip to main content
மோசடிக் குற்றங்களுக்குக் குறைந்தது 6 பிரம்படிகள் தண்டனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மோசடிக் குற்றங்களுக்குக் குறைந்தது 6 பிரம்படிகள் தண்டனை

வாசிப்புநேரம் -
மோசடிக் குற்றங்களுக்குக் குறைந்தது 6 பிரம்படிகள் தண்டனை

படம்: Envato

சிங்கப்பூரில் இனி மோசடிக் குற்றங்களைப் புரிபவர்களுக்குக் குறைந்தது 6 பிரம்படிகள் கொடுக்கப்படும்.

குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து அதிகபட்சம் 24 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

மோசடிக் கும்பல் உறுப்பினர்களுக்கும் குழுவிற்கு ஆள்சேர்ப்பவர்களுக்கும் பிரம்படி விதிக்கப்படும்.

தங்கள் தனிப்பட்ட கணக்குகள் அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை மோசடி கும்பல்களுக்கு வழங்குவோருக்கும் அந்தத் தண்டனை பொருந்தும்.

அவர்களுக்கு அதிகபட்சம் 12 பிரம்படிகள் வரை கொடுக்கப்படலாம்.

புதிய திருத்தங்களைக் கொண்ட குற்றவியல் சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்கீழ் மோசடிகளுக்கான புதிய தண்டனைகள் வருகின்றன.

சிங்கப்பூரில் நடக்கும் குற்றங்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு மோசடிச் சம்பவங்கள் என்று உள்துறை மூத்த துணையமைச்சர் சிம் ஆன் (Sim Ann) தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டின் முதல் 6 மாதங்கள் வரை சுமார் 3.7 பில்லியன் வெள்ளியை மக்கள் மோசடிகளில் பறிகொடுத்தனர் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்