புவாங்கோக்கில் டாக்சியை உரசிய அவசர மருத்துவ உதவி வாகனம்
படம்: ROADS.SG
This audio is generated by an AI tool.
புவாங்கோக்கில் அவசர மருத்துவ உதவி வாகனமும் டாக்சியும் விபத்தில் சிக்கின.
யாருக்கும் காயமில்லை.
நேற்று காலை 7.30 மணியளவில் சம்பவம் நடந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) 8 World செய்தியிடம் தெரிவித்தது.
சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியானது.
அவசர மருத்துவ உதவி வாகனத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது; விளக்கு மின்னியது.
வாகனமோட்டிகள் அவசர மருத்துவ உதவி வாகனத்திற்கு வழிவிட்டனர்.
அப்போது முன்னே சென்ற வாகனம் Comfort Delgro டாக்சியை உரசியது.
விபத்தின்போது அவசர மருத்துவ உதவி வாகனத்தில் யாரும் இல்லை.
அது சேவை வழங்கச் சென்றுகொண்டிருந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
உதவி வழங்க மாற்று வாகனம் அனுப்பப்பட்டதாகவும் அது தெரிவித்தது.