Skip to main content
பேலஸ்டியரில் மின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பேலஸ்டியரில் மின்-சைக்கிள் தீ - ஒருவர் காயம்

வாசிப்புநேரம் -
பேலஸ்டியரில் மின்-சைக்கிள் தீ - ஒருவர் காயம்

படம்: Facebook/Lawrence Lim

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பேலஸ்டியர் ரோட்டில் (Balestier Road) மின்-சைக்கிள் ஒன்று தீப்பற்றியதில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் இன்று அதிகாலை சுமார் 12.15 மணிக்கு நடந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. நீர் பாய்ச்சும் குழாயைக்கொண்டு தீ அணைக்கப்பட்டது என்றும் அது சொன்னது. சம்பவயிடத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம் ஒன்று சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் மின்-சைக்கிள் முற்றிலுமாகத் தீப்பிடித்துச் சாலையில் ஏரிந்துகொண்டிருப்பதைக் காண முடிகிறது. அதன் அருகே நடைபாதையில் ஒருவர் நிற்பதும் பதிவாகியிருந்தது. படத்தைப் பகிர்ந்தவர் மின்-சைக்கிள் தீப்பிடித்ததைப் பார்த்ததாகப் பதிவில் குறிப்பிட்டார். தீச் சம்பவத்துக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.
 

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்