போதைப்பொருள் உட்கொண்ட சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிக்குச் சிறை

போதைப்பொருள் உட்கொண்ட சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
50 வயது ராஹுல் டே அப்துல்லா (Rahul Tay Abdullah) போதைப்பொருள் உட்கொண்டது
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெரியவந்தது.
வழக்கமாக மேற்கொள்ளப்படும் சிறுநீர்ச் சோதனையின்போது அவர் போதைப்பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
டே பின்னர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் சமர்ப்பித்த இரண்டு சிறுநீர் மாதிரிகளிலும் methamphetamine போதைப்பொருள் அடையாளம் காணப்பட்டது.
கைதான டே மீது ஜனவரி மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது.
டே குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.
குறிப்பிட்ட போதைப்பொருள் உட்கொள்ளும் குற்றத்துக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அபராதமும் விதிக்கப்படலாம்.