Skip to main content
ரிவர் வேலி தீச்சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரிவர் வேலி தீச்சம்பவம் - 18 பேருக்கு விருது

வாசிப்புநேரம் -
ரிவர் வேலி கடைவீட்டில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் கைகொடுத்த 18 பேரைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கௌரவித்துள்ளது.

அவர்களுக்கு இன்று சமூக உயிர்க்காப்பாளர் விருது வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்கள் பட்டியலில் பொதுமக்களும் வெளிநாட்டு ஊழியர்களும் இடம்பெற்றனர்.

CNAவின் சமூக ஊடகப் பக்க நேர்காணலில் தோன்றிய திரு ரமேஷ் குமார், திரு ஷாகில் முகமது இருவரும் விருது பெற்றனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே கடைவீட்டில் சிக்கியிருந்தோருக்குப் பொதுமக்கள் உதவியதைக் குடிமைத் தற்காப்புப் படை நினைவுகூர்ந்தது.

அவர்கள் அனைவருக்கும் அது நன்றி தெரிவித்தது.

ரிவர் வேலி தீவிபத்தில் மொத்தம் 22 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 16 பேர் பிள்ளைகள்.

தீச்சம்பவத்தில் 10 வயது ஆஸ்திரேலியச் சிறுமி கடுமையாகக் காயமுற்று, மருத்துவமனையில் மாண்டார்.

அவசர நேரத்தில் மக்களுக்கு உதவியதற்காக விருது பெற்ற 18 பேர்:

திரு சின்னப்ப கண்ணதாசன்
திரு ரவி குமார்
திரு கோவிந்தராஜ் இலங்கேஸ்வரன்
திரு முத்துகுமார் முகேஷ்
திரு இந்தர்ஜித் சிங்
திரு சிவசாமி விஜயராஜ்
திரு நாகராஜன் அன்பரசன்
திரு சுப்பிரமணியம் ரமேஷ்குமார்
திரு சுப்பிரமணியம் சரண்ராஜ்
திரு ஹசான் இமாமுல்
திரு ஷாகில் முகம்மது
திரு தாஸ் தப்போஸ்
திரு ஹசான் ரஜிப்
திரு வருவேல் கிறிஸ்டபர்
திரு இஸ்லாம் ஷபிகுல்
திரு பென்சன் லோ
திரு ஷேக் அமிருதீன்
டாக்டர் லாரா பிஃபின்
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்