Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங்கின் ரொக்கப் பரிசு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை'

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரைப் பிரதிநிதித்து அண்மை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற நீச்சல் வீரர்கள் ஜோசப் ஸ்கூலிங் Joseph Schooling), அமண்டா லிம் (Amanda Lim) ஆகியோருக்கு ரொக்கப் பரிசைக் கொடுப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் கூறியுள்ளது.

கஞ்சா உட்கொண்டதன் தொடர்பில் ஸ்கூலிங்கும் லிம்மும் விசாரிக்கப்பட்டதாகக் கடந்த மாதம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்திருந்தது.

விளையாட்டாளர்கள் குறித்து முடிவெடுப்பதற்குத் தேவையான முடிவுகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மன்றம் தெரிவித்தது.

பெரிய போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டாளர்களான ஸ்கூலிங்கிற்கும் லிம்முக்கும் ஒப்பந்த அடிப்படையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்வதற்கான கடமை உண்டு என்று அது சொன்னது.

இந்நிலையில் தென்கிழக்காசிய விளையாட்டுகளிலும் காமன்வெல்த் விளையாட்டுகளிலும்
பதக்கம் வென்ற 68 விளையாட்டாளர்களுக்கு 860,000 வெள்ளி மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்