முதலாம் வகுப்புக்கான 2C கட்டப் பதிவு - 79 பள்ளிகளில் மிதமிஞ்சிய விண்ணப்பங்கள்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் தொடக்கநிலை முதலாம் வகுப்புப் பதிவுக்கான 2C கட்டத்தில் கிட்டத்தட்ட பாதிப் பள்ளிகள் மிதமிஞ்சிய விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன.
மொத்தம் 179 பள்ளிகள் விண்ணப்பங்களைப் பெற்றன.
அவற்றுள் 79 பள்ளிகளில் அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கல்வி அமைச்சு அந்தத் தகவலை இன்று வெளியிட்டது.
2C கட்டத்தில் இருக்கும் இடங்களைவிட ஆக அதிக விண்ணப்பங்களைப் பெற்றது பிரின்சஸ் எலிசபெத் தொடக்கப் பள்ளி.
அங்குள்ள 40 இடங்களுக்கு 159 பேர் விண்ணப்பித்தனர்.
அடுத்து யீஷூனில் உள்ள நார்த்லேண்ட் தொடக்கப்பள்ளி.
அங்கு 42 இடங்கள் இருந்தன. 141 பேர் அவற்றுக்கு விண்ணப்பித்தனர்.
விண்ணப்பங்களைப் பெற்ற ஐந்து பள்ளிகளின் பட்டியலில் நன் ஹுவா தொடக்கப்பள்ளி, சோங்ஃபு தொடக்கப்பள்ளி உள்ளிட்டவை இடம்பெற்றன.
கடந்த ஆண்டும் அந்தப் பள்ளிகள் இதே போல அதிக விண்ணப்பங்களைப் பெற்றன.
அளவு கடந்த விண்ணப்பங்களைப் பெற்ற பள்ளிகளில் 73 பள்ளிகள் குலுக்கல் முறையில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவிருக்கின்றன.

ஆதாரம் : CNA