சிங்கப்பூர் exclusive
"பயணிகளின் சிரமத்துக்கு வருந்துகிறோம்"- ரத்து செய்யப்பட்ட திருச்சி - சிங்கப்பூர் Scoot விமானம்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: Reuters/Edgar Su)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு வரவிருந்த ஸ்கூட் (Scoot) விமானம் புறப்படும் முன் பயணத்தை ரத்து செய்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
TR767 எனும் அந்த விமானச் சேவை திருச்சி நேரப்படி இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்குக் கிளம்பியிருக்கவேண்டும்.
ஆனால் விமானத்தில் ஏறிய பிறகு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி அறிவித்ததாக 'செய்தி'யிடம் பேசிய பயணி ஒருவர் சொன்னார்.
"10 நிமிடத்தில் அறிவிக்கப்பட்டது," என்றார் அவர்.
அரை மணிநேரத்துக்குப் பிறகும் கோளாற்றைச் சரி செய்ய முடியாததால் பயணம் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதாய் அவர் சொன்னார்.
சிங்கப்பூரிலிருந்து வேறு விமானம் மாறி பயணத்தைத் தொடரத் திட்டமிட்ட பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு, போக்குவரத்து, தங்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"செய்தி" ஸ்கூட் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டது.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி பயணத்தை ரத்து செய்ததாக ஸ்கூட் நிறுவனம் சொன்னது.
பாதிக்கப்பட்ட பயணிகள் வேறொரு தேதியில் பயணத்தைத் தொடரவோ, பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளவோ வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் அது குறிப்பிட்டது.
இன்று இரவு இந்திய நேரப்படி 9.30 மணிக்குச் சிங்கப்பூர் வருவதற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்துள்ளதாய் நிறுவனம் தெரிவித்தது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு அது மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

ஆதாரம் : Mediacorp Seithi