Skip to main content
இரு விமானப் பயணங்களை ரத்து செய்தது Scoot
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இரு விமானப் பயணங்களை ரத்து செய்தது Scoot

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரான் அதன் ஆகாயவெளியைத் தற்காலிகமாக மூடியதால் முன்னெச்சரிக்கையாக Scoot நிறுவனம் இரண்டு விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.

சிங்கப்பூரிலிருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கான TR596, TR597 ஆகிய இரண்டு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Scoot ஆகிய இரண்டு நிறுவனங்களின் விமானங்களும் ஈரானின் ஆகாயவெளியில் பறப்பதில்லை என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் CNA-யிடம் தெரிவித்தது.

மத்திய கிழக்கில் நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கவனிப்பதாக அது கூறியது.

தேவை ஏற்பட்டால் விமானப் பயணங்களின் பாதை மாற்றப்படலாம் என்றும் அது குறிப்பிட்டது.

சுமார் 5 மணி நேரத்திற்குப் பின்னர் ஈரான் அதன் ஆகாயவெளியை மீண்டும் திறந்தது.

இரண்டு வாரங்களாக ஈரானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

அமெரிக்க ராணுவம் அதில் தலையிடலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்