பிள்ளைகள் பிஞ்சு வயதிலேயே மின்னிலக்கச் சாதனங்களைப் பார்த்தால் விபரீத விளைவுகள் உண்டு - ஆய்வு
பிள்ளைகளிடம் பிஞ்சு வயதிலேயே மின்னிலக்கச் சாதனங்களை அறிமுகப்படுத்தினால் விபரீத விளைவுகள் உண்டாகும் என்று A*STAR நடத்திய ஆய்வுகள் சொல்கின்றன.
அளவுக்கு அதிகமான பதற்றம்; முடிவெடுக்கும் திறனில் மந்தம்.
பிள்ளைகளின் மூளை ஒரு வயதாவதற்குள் ஒரு மடங்குக்கு மேல் வளர்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மூன்று வயதாவதற்குள் பெரியவர் ஒருவரின் மூளை அளவில் 80 விழுக்காட்டுக்கு நிகரான வளர்ச்சியடைகிறது.
அந்த அதிவேக வளர்ச்சியால் பிள்ளைகளிடையே மின்னிலக்கச் சாதனங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அவற்றைத் தவிர்ப்பதற்குப் பெற்றோர் பிள்ளைகளுடன் கூடுதல் நேரத்தைச் செலவிடும்படி ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வெளிப்புறங்களில் விளையாடலாம். இசை கேட்கலாம். ஒன்றாகச் சேர்ந்து நூல்கள் வாசிக்கலாம்.
பெற்றோராக இருக்கும் பொறியியலாளர் ஒருவர் இந்த மின்னிலக்க யுகத்தில் சாதனங்களின் திரைநேரத்தைக் காட்டிலும் சிறு வயதுக் குழந்தைகளுக்குப் பொம்மைகள் பொருத்தமாக இருக்கும் என்று கூறுகிறார்.
A*STAR நிறுவனம் பிள்ளைகள் பெரியவர் ஆகும்வரை ஆராய்ச்சிகளைத் தொடரும்.
வயது கூடும்போது அறிகுறிகள் மாறுகின்றனவா அல்லது நிலையாக உள்ளனவா போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.
ஆய்வின்மூலம் கண்டுபிடிக்கப்படும் தகவல்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திட்டமிட உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.