Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகள்: மேலும் 3 தங்கப் பதக்கங்களை வென்ற  சிலாட் வீரர்கள்

வாசிப்புநேரம் -
31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகள்: மேலும் 3 தங்கப் பதக்கங்களை வென்ற  சிலாட் வீரர்கள்

(படம்: SportSG/Stanley Cheah)

ஹனோயில் நடைபெறும் 31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் சிலாட் வீரர்கள் மேலும் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

சிலாட் போட்டியின் இறுதி நாளான இன்று நூருல் சுஹைலா முகமது சைஃபுல், மலேசியாவின் சித்தி ஷஸ்வானா அஜக்கை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இந்தோனேசிய வீரரை எதிர்த்துப் போட்டியிட்ட முகமது ஹசிம் முகமது யுஸ்லியும் தாய்லந்து வீரரை எதிர்த்துப் போட்டியிட்ட ஷேக் ஃபர்ஹானும் தங்கப் பதக்கங்களை வென்றார்.

இம்முறை தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் சிலாட் குழு சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளது.

அது மொத்தம் 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

-CNA/mt(rw)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்