Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் - சிங்கப்பூரின் பதக்க வேட்டையில் இன்றைய நிலவரம்

வாசிப்புநேரம் -

31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள்.

சிங்கப்பூரின் பதக்க வேட்டையில் இன்று (20 மே) மேலும் சில.

English Billiards

  • இரட்டையர் பிரிவு - தங்கம்.

சிங்கப்பூரின் பீட்டர் கில்கரைஸ்ட், அலெக்ஸ் புவான் (Peter Gilchrist, Alex Puan) இணை அதில் போட்டியிட்டனர்.

மியன்மார் இணையை வீழ்த்தி அவர்கள் தங்கத்தைக் கைப்பற்றினர்.

English Billiards போட்டியின் இரட்டையர் பிரிவில் சிங்கப்பூர் தங்கம் வென்றிருப்பது இதுவே முதல்முறை.

புள்ளி விவரம் 3க்கு 1.

10 மீட்டர் குறிசுடும் போட்டியின் இறுதிச்சுற்று.

  • பெண்கள் குழுப் பிரிவு - தங்கம்

அமண்டா மாக் சாவ் கெங், டெ சியு ஹோங், தியோ ஷுன் சி(Amanda Mak Sao Keng, Teh Xiu Hong, Teo Shun Xie) உள்ளிட்ட மூவரும் அந்தப் பிரிவில் களமிறங்கினர்.

அவர்கள் மூவரும் 1,697 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றனர்.

50 மீட்டர் குறிசுடும் போட்டி

  • பெண்கள் பிரிவு -  வெண்கலம்

435 புள்ளிகளைப் பெற்று சிங்கப்பூரர் மார்டினா வெலோசோ (Martina Veloso) வெண்கலம் வென்றார்.
 

(படம்: Chow Kim Sun, Sport Singapore/ Dyan Tjhia)

சீன சதுரங்கப் போட்டி

  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு - தங்கம்

அந்தப் போட்டியில் சிங்கப்பூர் தங்கம் வென்றிருப்பது இதுவே முதல்முறை.

கம்போடிய விளையாட்டாளரை சிங்கப்பூரின் ஆல்வின் வூ (Alvin Woo) வீழ்த்தினார்.

(படம்: Sport Singapore/ Dyan Tjhia)

சைக்கிளோட்டம்

  • பெண்கள் பிரிவு -  வெள்ளி.

32 வயது சிங்கப்பூரர் லு யி வெய் (Luo Yi Wei) 40 நிமிடங்கள் 47 புள்ளி 0-5-1 விநாடிகளில் போட்டியை முடித்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்