Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஓட்ட வீராங்கனை சாந்தி பெரேரா தங்கம் வென்றிருக்கிறார்

வாசிப்புநேரம் -

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் ஓட்ட வீராங்கனை சாந்தி பெரேரா (Shanti Pereira) திடல்தடப்போட்டிகளின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார்.

23.51 வினாடிகளில் 200 மீட்டர் ஓட்டத்தை முடித்து புதிய தேசியச் சாதனையையும் படைத்துள்ளார் சாந்தி.

இதற்கு முன் நடந்த தேர்வு ஓட்டத்தில் அவர் 24.06 வினாடிகளில் தனது ஓட்டத்தை முடித்திருந்தார்.

25 வயது சாந்தி 200 மீட்டர் ஓட்டத்தில் பெற்றிருக்கும் இரண்டாவது தங்கப்பதக்கம் இது.

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளின் 200 மீட்டர் போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றார்.

அதன் பின்னர் 2017, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற
தென்கிழக்காசிய விளையாட்டுகளின் 200 மீட்டர் போட்டியில் சாந்தி வெண்கலப்பதக்கம் வென்றார்.

சாந்தி பெற்றுள்ள இந்தத் தங்கப்பதக்கத்துடன் சிங்கப்பூர் இதுவரை 5 தங்கம் வென்றுள்ளது.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்