Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"குறைந்தது 20 தங்கப் பதக்கங்களை வெல்ல திட்டமிடும் சிங்கப்பூர் வீரர்கள்"

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் நீர் விளையாட்டு அணியினர் இவ்வாண்டின் தென்கிழக்காசியா விளையாட்டுகளில் குறைந்தது 20 தங்கப் பதக்கங்களை வெல்லத் திட்டமிடுவதாகக் கூறியுள்ளனர்.

தாய்லந்தில் நடக்கும் போட்டியில் 71 வீரர்கள் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பர்.

அவர்களில் 40 பேர் முதன்முறை போட்டியில் பங்கேற்கின்றனர்.

முக்குளிப்பு வீரர்களான ஏன்ஸ்லி குவாங் (Ainslee Kwang), ரயென் சென் (Ryenne Chen). இருவருக்கும் வயது 14.

பல்வேறு நீச்சல் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. குறிப்பாக, 2017க்குப் பிறகு இவ்வாண்டு மீண்டும் கலைநயமான நீச்சல் போட்டி நடக்கவிருக்கிறது.

தென்கிழக்காசிய விளையாட்டுகள் மூலம் வீரர்கள் தங்கள் இலக்குகளை அடைகிறார்களா என்பதைத் தீர்மானிக்க முடியும் என்று சிங்கப்பூர் நீச்சல் அணியின் தலைவர் கென்னத் கோ (Kenneth Goh) கூறினார்.

2023ஆம் ஆண்டு கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் அணி நீர் விளையாட்டுகளில் 21 தங்கப் பதக்கங்களை வென்றது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்