31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகள்: சிங்கப்பூரின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் சிலாட் வீரர்

(படம்: SportSG/Andy Chua)
31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் அதன் முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறது.
ஆண்கள் பிரிவின் ஒற்றையர் போட்டியில் சிலாட் (Silat) வீரர் இக்பால் அப்துல் ரஹ்மான் அந்தத் தங்கப்பதக்கத்தை வென்றார்.
அவர் தட்டிச்சென்ற முதல் தங்கப்பதக்கம் அது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் தென்கிழக்காசிய விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
சிங்கப்பூர் இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறது.
அவற்றில் 2 சிலாட் போட்டிகளில் வெல்லப்பட்டவை.
-CNA