Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

எப்போதும் ஒருவரை ஒருவர் மதிப்புடன் நடத்துங்கள்: நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நாடாளுமன்ற நாயகராகத் திரு சியா கியன் பெங் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தம்மீது நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை மீண்டும் வழங்கியதற்கு அவர் அனைவருக்கும் நன்றி சொன்னார்.

திரு சியா கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆவது நாயகராகத் தெரிவானார். அப்போதிலிருந்து நியாயமான, உறுதியான, பாகுபாடற்ற முடிவுகளை வழங்குவதை உறுதிசெய்துவந்துள்ளதாக அவர் சொன்னார்.

அதே ஆர்வத்துடன் 15ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தை வழிநடத்தத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

15ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தில் தாம் பார்க்க விரும்புவதாகத் திரு சியா சிலவற்றைக் குறிப்பிட்டார்.

உறுப்பினர்கள் ஒவ்வொரு கூட்டத்துக்கும் தவறாமல் வருவது, உரை, கேள்வி - பதில் அங்கத்தைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் வைத்துக்கொள்வது, தேவையில்லாமல் திரும்பத் திரும்பச் சொல்வதைத் தவிர்ப்பது ஆகியவை அவற்றுள் சில. 

நீண்ட உரைகள் சக உறுப்பினர்களை மட்டுமல்ல பொதுமக்களின் கவனத்தையும் திசைத் திருப்பிவிடும் என்பதை நினைவில் கொள்ளுமாறு திரு சியா அறிவுறுத்தினார்.

விவாதங்களில் நிலைப்பாடு மாறலாம், ஒப்புக்கொள்ளலாம், ஒப்புக்கொள்ளாமலும் இருக்கலாம்; 
கவனத்தை ஈர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது; இது TikTok நேரலை அல்ல, நாடாளுமன்றம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றார் அவர்.

ஒருவரை ஒருவர் மதிப்புடன் நடத்துமாறும், நேர்மையுடனும் உறுதியுடனும் சிங்கப்பூர் மக்களுக்குச் சேவையாற்றுவதே நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் திரு சியா கேட்டுக்கொண்டார். 

15ஆவது நாடாளுமன்றம் சிங்கப்பூர் வரலாற்றிலேயே மிகப் பெரிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களையும் ஆக அதிகமான பெண் உறுப்பினர்களையும் கொண்டுள்ளது என்பதையும் அவர் சுட்டினார்.

நாடாளுமன்றத்தில் மொத்தம் 99 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 32 பேர் பெண்கள். 

இரவு எட்டு மணிவாக்கில் அதிபர் தர்மன் சண்முரத்னம் அரசாங்கத்தின் முன்னுரிமைகள், கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை விவரித்து உரையாற்றுவார். 

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்