Skip to main content
"நேப்பாளத்தில் காணாமல்போன 9 சிங்கப்பூரர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"நேப்பாளத்தில் காணாமல்போன 9 சிங்கப்பூரர்கள்- தேடல் தொடர்கிறது"

வாசிப்புநேரம் -
"நேப்பாளத்தில் காணாமல்போன 9 சிங்கப்பூரர்கள்- தேடல் தொடர்கிறது"

REUTERS/Athit Perawongmetha

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நேப்பாளப் பெருவெள்ளத்தில் காணாமல்போன 9 சிங்கப்பூரர்களைத் தேடும் பணி தொடர்வதாக வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை (26 ஆகஸ்ட்) ஏற்பட்ட பேரிடரில் 1,200க்கும் அதிகமானோர் மாண்டனர்.

5,000க்கும் அதிகமானோரை இன்னமும் காணவில்லை.

அவர்களில் 9 பேர் சிங்கப்பூரர்கள்.

அவர்களைத் தேட நேப்பாள அதிகாரிகளுடன் சேர்ந்து சிங்கப்பூர் அதிகாரிகள் பணியாற்றுவதாக வெளியுறவுத் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் (Gan Siow Huang) கூறினார்.

"இந்த விநாடியில்கூடத் தேடல் பணி தொடர்கிறது. இக்கட்டான இந்தக் காலத்தில் தேவையான அனைத்து உதவியும் செய்வோம்," என்றார் அவர்.

நேப்பாளத்திடம் சிங்கப்பூரின் மனிதாபிமான உதவித் தொகுப்பை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

சிங்கப்பூர் நேப்பாளத்துக்குச் சுமார் 560,000 வெள்ளி மதிப்புள்ள மனிதாபிமான உதவித்தொகுப்பைத் தயார் செய்துள்ளது.

மரபணுச் சோதனை மேற்கொள்வதற்கான சாதனங்கள், தேடல், மீட்பு நடவடிக்கைகளுக்குக் கைகொடுக்கும் அதிநவீன சாதனங்கள் உள்ளிட்டவை அவற்றுள் அடங்கும்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்